வடக்கில் இராணுவம்! சகிக்க முடியாது!! ஆஸி.தூதுவரிடம் சி.எம்

போர் முடிவடைந்து 6வருடங்களாகி விட்டன. இராணுவப்பிரசன்னத்தை படிப்படியாக குறைப்பது தான் முறை. அதுமட்டுமல்ல இராணுவப்பிரசன்னம் தொடர்வது எமது மக்களால் ஏற்றுக் கொள்ளவும் முடியாது எனவும் வடமாகாண முதலமைச்சர் அவுஸ்திரேலிய தூதுவரிடம் எடுத்துரைத்தார்.

அவுஸ்திரேலிய தூதுவர் பிரைஸ்ஸி ஜோன் ஹட்டக்சன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் இடையில் சந்திப்பு ஒன்று முதலமைச்சர் வாசஸ்தலத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் ஆஸி. தூதுவரிடம் கலந்தாலோசித்த விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே வடக்கு முதல்வர் சி.வி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவுஸ்திரேலிய தூதுவரின் யாழ். வருகையின் போது ஆஸி. அரசாங்கத்தினால் வடமாகாணத்திற்கு தேவைப்படும் உதவித்திட்டங்கள் தொடர்பில் பரிசீலிக்க வந்ததாக அவர் என்னிடம் தெரிவித்தார்.

ஆஸி.அரசின் உதவித்திட்டங்கள் தொடர்பில் நான் ஒன்றைக் கூறினேன். மத்திய அரசு, ஆஸி. அரசு இணைந்து வடமாகாணத்திற்கு பல்வேறு உதவித்திட்டங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் மாகாண அரசுக்கு இருக்கும் பங்கு சொல்லக்கூடியதாக இல்லை.

எங்கள் மக்களுக்காக செய்யும் போது மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்களின் கருத்தை அறிந்து செய்வது தான் முறை என்று கூறிறேன். ஆனால் அதற்கு அவர் அரசாங்கத்துடன் அரசாங்கம் இணைந்து செய்வதாக தெரிவித்தார். அதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் மக்களுடைய பிரதிநிதிகளை புறக்கணித்து மத்திய அரசின் சொற்படி செய்வது சரியில்லை என்றும் எங்களுடன் கலந்தாலோசித்து உதவித்திட்டங்களை செய்யுமாறு கேட்டிருந்தேன். அதற்கு அவர் அதனைத் தான் கருத்தில் எடுப்பதாகக் கூறிச் சென்றார்.

இராணுவ மயம்சி.வி.விக்கினேஸ்வரன்தமிழீழம்வடகிழக்குவடக்குவடக்கு மாகாணம்வடக்கு முதல்வர்
Comments (0)
Add Comment