வடக்கில் பணியாற்றும் 200 கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகளிற்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கில் இரண்டு வருடங்கள் பூர்த்தியான உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர்கள் தொடர்ந்தும் வடக்கில் பணியாற்ற தாம் விரும்புவதாக மேன்முறையீடு செய்துள்ளனர்.
இதன்காரணமாக 230 உத்தியோகத்தர்களின் இடமாற்றம் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுப்படி ரத்து செய்யப்பட்டுள்ளதாக வட மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்காண்டோ கூறியுள்ளார்.
இதேவேளை 230 உத்தியோகத்தர்கள் தவிர மேலும் 56 பொலிஸ் உத்தியோகத்தர்கள் வடக்கில் பணியாற்றுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.