வடக்கு, கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டத்திற்கு ஜேர்மன் 40 இலட்சம் யூரோ நிதியுதவி

வடக்கு கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் வேலைத்திட்டத்திற்காக மேலும் 40 இலட்சம் யூரோக்களை வழங்குவதற்கு ஜேர்மன் இணக்கம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டளவில் இலங்கையை கண்ணிவெடிகள் அற்ற வலயமாக மாற்றும் வேலைத்திட்டத்திற்காகவே இந்த நிதி ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது. வடக்கு, கிழக்கில் கண்ணிவெடிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஹலோ ட்ரெஸ்ட், எம்.ஏ.ஜி ஆகிய அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு இந்நிதி ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது.

ஹலோ ட்ரெஸ்ட் அமைப்பு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. எம்.ஏ.ஜி அமைப்பு மன்னார், திருகோணமலை, கிளிநொச்சி, முல்லைதீவு ஆகிய மாவட்டங்களில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஜேர்மன்
Comments (0)
Add Comment