வடபகுதியில் திடீரென பெருமளவு இராணுவத்தினர் குவிப்பு…

யாழ். நகர் பகுதிகள் மற்றும் யாழில்  முக்கிய வீதிகளில் திடீரென பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதோடு  கிளிநொச்சியின் நகர் பகுதிகளிலும் , வீதியோரங்களிலும்   சிங்கள வாசகங்கள் பொறிக்கப்பட்ட இராணுவத்தின் கொடிகள் கட்டப்பட்டுள்ளதாகவும்   தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டும் அல்லாமல்  A9 பிரதான வீதியின் இரு பக்கமும் கிளை வீதிகளுக்கு இருவர் வீதம் பல நூற்றுக்கணக்கில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.

மேலும், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இருக்கும் இராணுவ முகாமிலும் பல நூறு இராணுவத்தினர் அணிவகுத்து நிற்பதாகவும் தெரிவிகப்படுகின்றது.

இதேவேளை   திடீரென  வடபகுதியில்  இவ்வாறு பெருமளவு  படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இராணுவம்கிளிநொச்சிகுவிப்புயாழ்ப்பாணம்வடபகுதி
Comments (0)
Add Comment