வடமராட்சியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகிய அரச பேருந்து..

யாழ்ப்பாணத்தில் இருந்து வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு ஊடாகப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிகபட்டுள்ளது.

மருதங்கேணி இரும்புப் பாலத்துக்கும், கல்லடி வைரவர் கோயிலுக்கும் இடையே இந்த விபத்து நடந்துள்ளது.

குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனினும் இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேருந்துவடமராட்சிவிபத்துவீதி
Comments (0)
Add Comment