கோணாவில் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் திரிபுபடுத்திய செய்தியை வெளியிட்ட வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் வழங்கிய கருத்தையடுத்து குறித்த மாணவன் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் தகவல் வழங்கியிருந்தான்.
இதனை அடுத்து மாணவன் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் தாக்கப்பபட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்,
இதேவேளை அண்மையில்ஊடகவியலாளர்களை சந்தித்த வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொசான் குறித்த மாணவன் தவறாக வீதியில் துவிச்சக்கரவண்டியில் சென்றபோது விபத்திற்குள்ளானதாக கூறியிருந்தார்,
இந்நிலையில் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவனை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் பார்வையிட்டு அறிக்கை பெற்றுள்ளனர்.
இவ்வாறான நிலையில் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் திரிபுபடுத்திய செய்தியை வெளியிட்ட வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக , பொலீஸ் முறைப்பாட்டு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.