தமிழர் பாரம்பரிய வேள்வி திருவிழா ஒன்று இன்று அதிகாலை வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நந்திக்கடல் பெருங்கடலுடன் சங்கமிக்கும் வெட்டுவாய்கால் பகுதியில் ஆண்டாண்டு காலமாக அப்பகுதி மக்கள் இந்த வழிபாட்டு நிகழ்வை மரபு வழியாக நிகழ்த்திவந்துள்ளனர்.
இந்நிலையில் பிறிதொரு இடத்தில் இன்று அதிகாலை இந்த வேள்வி திருவிழா நடைபெற்றுள்ளது.
வட்டுவாகல் மக்களின் மரபுவழி வழிபாட்டு பகுதியை 2009 ஆண்டு ஶ்ரீலங்கா கடற்படை மற்றும் தரைப்படையினர் ஆக்கிரமித்தனர்.
இதன் காரணமாக இறுதி யுத்தத்தின் பின்னர் அப்பகுதி மக்கள் குறித்த வழிபாட்டு நிகழ்வை வேவ்வேறு இடங்களில் நிகழ்த்திவருகின்றனர்.
அந்த வகையில் இன்று அதிகாலை இந்த வேள்வித் திருவிழா வட்டுவாகல் ஆற்றுப்பகுதியில் நடைபெற்றுள்ளது.
மேலும் தமது பாரம்பரிய வழிபாட்டு நிகழ்வை படைத்தரப்பினர் திட்டமிட்டு தடைசெய்வருவதாக குற்றம் அப்பகுதி மக்கள் குற்ரம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில்படையினனா தமது மரபுவழிபாட்டு தளத்தை விடுவிக்கவேண்டும் என்று இன்று கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.