இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் வேறும் தரப்பினரும் இணைந்து இந்த சூழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். சிங்கள மக்களை தங்களது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீளவும் இணைக்க முயற்சிக்கப்படும் அதேவேளை, வடக்கில் காணப்படும் சிங்கள பாடசாலைகளுக்கு மாகாணசபை எந்தவிதமான உதவிகளையும் வழங்குவதில்லை.குறிப்பாக வவுனியா வெலிஓயா போன்ற பிரதேசங்களில் சிங்கள பாடசாலைகளில் நிலவி வரும் ஆசிரிய வெற்றிடங்கள் நிரப்பப்படுவதில்லை.
அத்தோடு, சிங்கள மக்களிடமிருந்து பலவந்தமாக பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகளில் தமிழ் மக்கள் குடியேற்றப்படுகின்றனர். எனவே, இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றம் தற்போதும் நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.