வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் இன்று கிளிநொச்சி, இரணைதீவுக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரணைதீவில் தங்கியிருக்கும் மக்களின் குடிதண்ணீர் விநியோகத்துக்காக ஓர் இரு சக்கர உழவு இயந்திரத்தையும் மக்களுக்காக அவர்கள் வழங்கி வைக்கவுள்ளனர் .
போராட்டம்
கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் முதல் தங்களின் வாழ்விடங்களை விடுவிக்கக் கோரி இரணைமாதா நகரில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மக்கள்
அக்கோரிக்கை நிறைவேறாத நிலையில் இரணை தீவுக்குச் சென்று அங்கேயே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அங்குள்ள மக்களின் பலவிதமான தேவைகளில் ஒவ் வொருவரும் ஓர் உதவிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் வட மாகாண முதலமைச்சர் இன்று இரணைதீவிற்கு நேரடியாகப் சென்றுள்ளார்.
இதன் போது அங்குள்ள மக்கள்இற்கு 10 கழிப்பறை வசதிகளையும் ஏற்பாடு செய்து அவர் வழங்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.