வன்னி பெருநிலப்பரப்பில் மூத்த ஆளுமைகளில் ஒருவரான சித்த வைத்தியர் அரியகுட்டி நாகமணி இயற்கை எய்தினார்..

வன்னி பெருநிலப்பரப்பில் மூத்த ஆளுமைகளில் ஒருவரான சித்த வைத்தியர் அரியகுட்டி நாகமணி அவர்கள் இன்று தனது 83 ஆவது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.

முல்லைத்தீவு மாவடடத்தின் கற்சிலை மடுவில் 1936 ம் ஆண்டு பிறந்த இவர் சித்த வைத்தியர் அரியகுட்டிஅவர்களின் ஏக புதல்வனாவார். தனது  தந்தையின் வழியில் சித்த வைத்திய துறையில் தனது 30 ஆவது வயதில்  கால் பதித்த இவர் இயற்கை எய்தும் வரை தொடர்ந்து நோய் தீர்க்கும் மணிமந்திர ஒளடத துறையில் கைதேந்தவராக விளங்கினார்.

விஷக்கடி மகப்பேற்று வைத்தியம் சிறு பிள்ளைகளுக்கான மருத்துவம் சர்பரோக மருத்துவம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய இவர் தன் வழியில் தனது மகன் வன்னியசிங்கத்தை ஆயுள் வேத வைத்தியராக்கியது மட்டுமல்லாது தனது இந்த வைத்திய துறையை எதிர்கால  சந்ததிக்கும் எடுத்துச்செல்ல தனது பேரனான வன்னியசிங்கம் ஆதவன் அவர்களை இந்த துறையில் வளர்க்க ஆசைப்பட்டு  யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ துறையில் படம் பெற செய்து தற்போது அவர் மக்களுக்காக சித்த  வைத்தியராக பணிபுரிகிறார்.

ஒரு தலைசிறந்த மருத்துவ பரம்பரையில் தோன்றிய அரியகுட்டி நாகமணி அவர்கள்  மருத்துவ துறை மாத்திரமின்றி எமது பாரம்பரியங்களை இன்றைய தலைமுறைக்கு கொடுக்கும் ஒரு பொக்கிஷமாகவும் திகழ்ந்தார்.

இவரது சேவையை மெச்சி அகில இலங்கை சித்த மருத்துவ சபை விசாரண எனும் பட்டத்தை வழங்கி மதிப்பளித்ததோடு துணுக்காய்  வலயக்கல்வி அலுவலகம் 2014 ம் ஆண்டு பௌர்ணமி கலை விழாவில் சிறப்பு கௌரவத்தை வழங்கியதோடு 2017 ம் ஆண்டு ஒட்டுசுட்டான் பிரதேச கலாச்சார பேரவை ஊடாக அதி உயர் விருத்தாகிய மருத்துவ துறைக்கான பண்டாரவன்னியன் விருதினையும் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் உடலம் மக்கள் அஞ்சலிக்காக  கற்சிலைமடுவிலுள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதோடு நாளை இறுதிக்கிரிகைகள் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.

பண்டாரவன்னியன் விருதுவன்னி
Comments (0)
Add Comment