வயிற்றில் போதை மாத்திரைகளை சுமந்துசென்ற பெண் கைது…

வயிற்றில் அபாயகர  போதை மாத்திரைகளை சுமந்து சென்ற  பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணுடன் சென்ற ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட  இருவரும் பாகிஸ்தான் நாட்டுப் பிரசைகள் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

 

கைதுசெய்யப்பட்ட பெண்ணின் வயிற்றிலிருந்து 35 ஹெரோயின் குளிசைகள் அகற்றியெடுக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் பெறுமதி 4.2மில்லியன் என கணிக்கப்பட்டுள்ளது.

 மேலும் கைதுசெய்யப்பட்ட  இருவரிடமும் தீவிர விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைதுபாகிஸ்தான்பெண்விமானநிலையம்
Comments (0)
Add Comment