வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வருமானவரி செலுத்துபவர்கள் வருமானத்தை தானாக முன்வந்து தெரிவிக்க வாய்ப்பு அளிக்கும் வகையில், ‘வருமானத்தை தெரிவிக்கும் திட்டம்-2016’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இந்த திட்டம் செப்டம்பர் 30-ந் தேதி வரை அமலில் இருக்கும். இந்த திட்டத்தின் மூலம் அனைவரும் பயனடையும் வகையில் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறையின் தலைமை அலுவலகமான ஆய்க்கார் சேவா கேந்திரா பவனில் ஒரு சேவை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கூடுதல் விவரங்கள் தெரிந்துகொள்ள வருமான வரித்துறை அதிகாரி பி.கே.பிரதீப்குமாரை தொடர்பு கொள்ளலாம். இந்த மையத்தின் தொலைபேசி எண் 044-2833 3252 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.