புதுச்சேரியில் தேர்தலை ஒட்டி வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட வருவாய் துறையினருடன், அரசியல் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் விளம்பர பேனர்கள், சுவரொட்டிகளை நேற்று காலை 10 மணிக்குள் அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சுந்தர வடிவேலு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் அகற்றப்படாத பேனர் மற்றும் கட் அவுட்களை வருவாய் துறையினர், போலீஸ் பாதுகாப்புடன் இன்று அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்திராகாந்தி சிலை அருகே வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்ற முற்பட்ட போது, அரசியல் கட்சியினர் சிலர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்களை வெளியேற்றி, பேனர்கள் அகற்றும் பணியை வருவாய்துறையினர் தொடர்ந்தனர்.