வர்தா புயல் எதிரொலி: கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

வங்கக் கடலில் உருவாகியுள்ள வர்தா புயல் திங்கள்கிழமை மதியம் சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வட மாவட்டங்களில் மழை பெய்யுமெனவும், மணிக்கு 60 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையேறும் பகுதியில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் அதன்பாதிப்பு கடலூர் மாவட்டத்திலும் ஏற்படும் என்று மாவட்ட நிர்வாகம் கணித்துள்ளது. அதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (டிச.12) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

கடலூர்பாலச்சந்திரன்வங்க கடல்வட தமிழகம்வர்தா புயல்வானிலை ஆய்வு மையம்விடுமுறை
Comments (0)
Add Comment