வர்த்தகக் கொள்கையை நீக்கும் கட்சிக்கே ஆதரவு – வெள்ளையன்

உலக வர்த்தகக் கொள்கையை நீக்கும் கட்சிக்கே வரும் சட்டசபைத் தேர்தலில் ஆதரவளிக்க போவதாக வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.   மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வணிகர்கள் சங்கப் பேரவையின் உசிலம்பட்டி கிளை துவங்கப்பட்டது.

புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் மற்றும் பெரிஸ் மகேந்திரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளையன், உலக வர்த்தகக் கொள்கையால் அனைத்து தீமை விளைவிக்கும் பொருட்களை வாங்கும் கட்டாயத்தில் இருப்பதாகவும், இக்கொள்கையை நீக்கினால் மட்டுமே அனைவருக்கும் சுதந்திரம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

ஆதரவுஉலகம்கட்சிகொள்கைசட்டசபைதலைவர்தேர்தல்நீக்குதல்பேரவைவணிகர்வர்த்தகம்வெள்ளையன்
Comments (0)
Add Comment