அம்பலாங்கொடையிலுள்ள அவரது வீட்டில் வைத்துக் கொல்லப்பட்ட வர்த்தகர் பிரேமசிறி ஹலம்பகேயின் கொலையுடன் தொடர்புடைய, பிரதான சந்தேகநபர் உட்பட மூவரைக் கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், அவர்களிடமிருந்து இரண்டு ஆயுதங்கள் மற்றும் கார் என்பவற்றை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். காலி கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும் பிரபல வர்த்தகருமான பிரேமசிறி, கடந்த ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.