வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 100 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு ..

முல்லைத்தீவு மாவட்டத்தின் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட நூறு மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு  துணுக்காய் வலயக்கல்வி அலுவலகத்தில் நேற்றையதினம்  துணுக்காய் வலயக்கல்வி பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது

வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் வ கமலேஸ்வரன் அவர்களுடைய 2018 ம் ஆண்டு குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட நூறு துவிச்சக்கர வண்டிகளே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது

முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 90 மாணவர்களுக்கும் முன்பள்ளி ஆசிரியர்கள் 10 பேருக்குமாக நூறு பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா பாராளுமன்ற உறுப்பினர் சி சிவமோகன் வடமாகானசபை பிரதி அவைத்தலைவர் வ கமலேஸ்வரன் வடமாகாண சபை உறுப்பினர் ஜி ரி லிங்கநாதன் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் உறுப்பினர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் என பலரும் கலந்துகொண்டனர்

 

சைக்கிள்துணுக்காய்நிகழ்வுமாணவர்கள்
Comments (0)
Add Comment