பிலிமத்தலாவையைச் சேர்ந்த குறித்த சிறுமி, கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைகளை மேற்கொண்ட வைத்தியர்கள் அவருடைய வலது காலை, மார்ச் 01ஆம் திகதி அறுவை சிகிச்சை செய்வதற்கு தீர்மானித்திருந்தனர். குறித்த சிறுமியை பரிசோதனை செய்த சிறப்பு வைத்தியர் பயிற்சி ஒன்றின் நிமித்தம் வெளிநாட்டுக்குச் சென்றதனால், அவருக்கு பதிலாக வேறொரு வைத்தியரே இந்த சிகிச்சையை செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.