வலிவடக்கு மற்றும் மண்டைதீவு பிரதேசங்களில் மக்களின் காணி சுவீகரிப்பினை நிறுத்தவேண்டும் என பிரேரணை சமர்பிக்கப்பட்டுள்ளது

வலிவடக்கு  மற்றும் மண்டைதீவு பிரதேசங்களில் காணி சுவீகரிப்பிற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த  நிலையில், அவற்றை மீளப்பெற வேண்டும் என யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிரேரணை ஒன்று, இன்று முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணையினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சமர்பித்துள்ளார்.

வலிவடக்கில்   பலாவி விமான நிலைய விரிவாக்கத்திற்காக 5 கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பல ஏக்கர் காணிகள்  சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதேபோல மண்டைதீவிலும் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாகவும் அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த காணிசுவீகரிப்பு நடவடிக்கையினை நிறுத்தக்கோரி குறித்த பிரேரணை இன்றைய மாவட்ட ஒருங்கிணைப்பு குழுகூட்டத்தில்  முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அறிவித்தல்!காணிசுவீகரிப்புபலாலிமண்டைதீவுவலிவடக்குவிமானநிலையம்
Comments (0)
Add Comment