வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலய 683 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 683 ஏக்கர் காணி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலிட்டி அம்மன் கோவிலுக்கு அருகாமையிலுள்ள மைதானத்தில் இக் காணி கையளிப்பு நிகழ்வு இன்று  இடம்பெற்றுள்ளது.

இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்கவால் யாழ் மாவட்டச் செயலர் நா. வேதநாயகத்திடம் உத்தியோகபூர்வமாக குறித்த காணிகள் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் மேலதிக மாவட்டச் செயலர், இராணுவ அதிகாரிகள் பொது மக்கள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதே வேளை 28 வருடங்களாக மக்கள் பாவனைக்கு விடப்படாத வீதியான காங்கேசன்துறை – வளலாய் வரையிலான வீதியும் தற்போது இராணுவத் தளபதியால் விடுவிப்புச் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும் குறித்த  வீதி காலை 6.00 மணிமுதல் மாலை 7.00 மணி வரை மட்டுமே மக்கள் பாவைனைக்கு விடப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது

இராணுவத் தளபதிமக்கள்மேலதிக மாவட்டச் செயலயாழ் மாவட்டச் செயலர்