வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு மீண்டும் நிலக்கரி வந்ததால் முதல் அலகில் மின் உற்பத்தி தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டம், வல்லூர் அனல் மின்நிலையத்தில் உள்ள மூன்று அலகுகளில் தலா 500 மெகாவாட் வீதம் 1,500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.
மின்உற்பத்திக்கு தேவையான நிலக்கரி, எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து, கன்வேயர் பெல்ட் மூலம் அனல் மின்நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த மார்ச் 15ஆம் தேதி நிலக்கரி எடுத்து வரும் கன்வேயர் பெல்ட் திடீரென அறுந்ததால், கொதிகலனுக்கு கொண்டு செல்லப்படும் நிலக்கரி தடைபட்டது. இதனால் கடந்த 26 ஆம் தேதி முதல் முதல் அலகில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
தற்போது நிலக்கரி தடையின்றி வரத்தொடங்கியதால் முதல் அலகில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. தற்போது மூன்று அலகுகளில் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி மட்டுமே நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் முழு அளவில் மின் உற்பத்தி நடைபெறும் என மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.