கடந்த 21ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களையும் அதனை தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற குண்டு வெடிப்புகள் மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அண்மைய நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட மக்கள் நடமாட்டம் மிக குறைவாக காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது
இருப்பினும் இன்று மாவடடம் படிப்படியாக வழமைக்கு திரும்புவதை அவதானிக்க முடிந்தது அரச தனியார் நிறுவனங்கள் வழமைபோன்று சேவைகளை வழங்கிவருகின்றன வியாபார நிலையங்கள் அனைத்தும் திறந்துள்ள போக்குவரத்துக்களும் இடம்பெறுவதை அவதானிக்க முடிந்தது
இருப்பினும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இராணுவத்தினரும் போலீசாரும் ஆயுதம் தாங்கிய நிலையில் வீதிகளில் சோதனை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள் குறிப்பாக கிறிஸ்தவ தேவாலயங்கள் வைத்தியசாலைகள் மாவட்ட செயலகம் பிரதேச செயலகங்கள் மற்றும் மக்கள் கூடுகின்ற இடங்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
குறிப்பாக மாங்குளம் ஒட்டுசுட்டான் பகுதிகளிலேயே வீதியில் செல்கின்ற வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு வாகணத்தில் இருக்கின்ற பயணிகள் இறக்கப்பட்டு வாகனங்கள் பயணிகளின் பயணப் பொதிகள் பரிசீலனை மேற்கொள்ளப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.