வவுனியாவில் நிதி நிறுவனத்தின் ஊழியர்களால் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் 7 மாதக் கர்ப்பிணிப் பெண் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
வவுனியா ஹொரவப்பொத்தானை வீதி இலுப்பையடிச் சந்திக்கு அருகே நேற்றுமுன்தினம் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது
கர்ப்பிணிப் பெண்ணின் கணவரால் நிதி நிறுவனத்திடம் குத்தகைக்குப் பெறப்பட்ட வாகனத்துக்கு 3 மாதங்களாக அவர் தவணைப் பணத்தைச் செலுத்தவில்லை என்றும்,
. பணத்தைப் பெற்றுக் கொள்வதற்குச் சென்ற நிதி நிறுவன ஊழியர்களே வாகனத்தில் இருந்த கர்ப்பிணிப் பெண்ணைத் தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது..