வவுனியாவில் கடனை வசூலிப்பதற்காக நிதி நிறுவன ஊழியர்கள் பொதுமக்களை அச்சுறுத்தல்…

வவுனியாவில் கடனை வசூலிப்பதற்காக நிதி நிறுவன ஊழியர்கள் பெண் ஒருவரை பின்தொடர்ந்து சென்று பின்தொடர்ந்து வீதியில் வைத்து அச்சுறுத்தியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.,

வவுனியா பூந்தோட்டம் பகுதியில், வீதியால் நடந்து சென்ற பெண்ணை பின் தொடர்ந்த நான்கு நிதி நிறுவன ஊழியர்கள் அவரை செல்ல விடாது தடுத்ததுடன், கடனை செலுத்தமாறு அச்சுறுத்தியுள்ளனர்.

இதனால் குறித்த பெண் செய்வதறியாது திகைத்து நின்றபோது  அவ்வீதியால் சென்ற இளைஞர்கள் சிலர் நிதி நிறுவன ஊழியர்களோடு முரண்பட்டுள்ளனர்

கடனை செலுத்தவில்லை என்றால் நீதி மன்றில் வழக்கு தொடுக்குமாறு கூறிய,   ஊழியர்களை குறித்த இளைஞர்கள்  அவ்விடத்தை விட்டு அகற்றியுள்ளனர்.

அத்துடன் குறித்த பெண்ணை  பொலிஸ் நிலயத்திற்கு சென்று முறையிடுமாறும் கூறியுள்ளனர்,

இந்நிலையில் குறித்த பெண் 4-ற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து நுண் கடன் பெற்றுள்ளதாகவும் கிழமையின் 5 நாட்களிலும் தவணை பணத்தினை செலுத்தி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக அப்பெண்ணின் கணவரும் பிரிந்து சென்றுள்ளமையினால் கடன்களை செலுத்துவதில் பல இன்னல்களை சந்தித்து வருகின்றார்,

இதேவேளை வவுனியா பூந்தோட்டத்தை அண்டிய பகுதிகளான அண்ணாநகர், மகாறம்பைகுளம், காத்தார்சின்னகுளம், ஸ்ரீநகர், போன்ற பகுதிகளில் நுண் நிதி நிறுவனங்களில் கடன்களை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது

குடும்ப சூழ்நிலைகள், வருமான மார்க்கங்கள் பற்றிய விடயங்கள் கணக்கிலெடுக்கபடாமல் நிறுவனங்கள் கடன் வழங்கி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது,

இதன் காரணமாக  பல குடும்பங்களிற்கிடையே  பிரச்சனைகள் காணப்படுவதுடன், சிலர் தற்கொலை முயற்சிகளிலும் ஈடுபட்டு வருவதாக கிராம அமைப்புக்கள் விசனம் தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

நிதிநிறுவனங்கள்பாதிப்பு.பொதுமக்கள்வவுனியா
Comments (0)
Add Comment