வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஐவர், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திருமதி ச. பத்மரஞ்சன் தெரிவித்துள்ளார்.
பயனாளிகளின் பெயர் விவரங்களின் மூலம், கடன் தொகையைப் பெற்று நிதி மோசடி செய்ததாக வவுனியா சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சிலர் மீது கடந்த காலங்களில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குறித்த விடயம் தொடர்பில் கொழும்பில் உள்ள சமுர்த்தித் திணைக்களத்தின் தலைமைப் பணிமனையின் மூலம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
விசாரணைகளின் முடிவில், வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் 5 பேருக்கு எதிரான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளது..
அதனடிப்படையில், குறித்த ஐவரையும் பதவியில் இருந்து நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.