சிறுவர்களை இலக்கு வைக்கும் சாராயம் சிகரெட் கம்பனிகளின் தந்திரோபயங்களையும் , மாணவர்கள் மத்தியில் சிகரெட் பாவனை என்பது முட்டாள்தனத்தின் அடையாளம் என்கின்ற விடயத்தை தெளிவுபடுத்தும் கருத்தரங்கு வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கருத்தரங்கு வவுனியா திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையில் நேற்றையதினம் இடம்பெற்றது.
இதில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர் அருளானந் கலந்துகொண்டு சிறுவர்களிற்கு போதைபழக்கவழக்கங்களின் தீமை பற்றி விளக்கமளித்துள்ளார்.