வவுனியாவில் செயற்படும் மனித உரிமைகள் பவுண்டேசனுக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் தொடர்பு இல்லை..

வவுனியாவில் செயற்படும் மனித உரிமைகள் பவுண்டேசனுக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் தொடர்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வவுனியா அலுவலக பொறுப்பதிகாரி சட்டத்தரணி எல். ஆர் வசந்தராசா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அண்மையகாலமாக பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் மனித உரிமைகள் அமைப்பிற்கும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் வரும் எவ்வித தடங்கல்களுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொறுப்பு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அண்மைய காலங்களில் திரிய மனித உரிமைக்குழு என்ற பெயரில் பல இடங்களில் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் குழு ஒன்று செயற்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரியிடம் வினவியபோதே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் செயற்பட்டுவரும் திரிய மனித உரிமைகள் அமைப்பு அல்லது திரிய நிறுவனமே இந்நிறுவனத்திற்கும் எமது இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவிற்கும் எவ்வித தொடர்புகளும் கிடையாது  என்றும்,

அவர்களின் செயற்பாடுகள் வேறு எமது செயற்பாடுகள் வேறு எனவும்  அவர்கள் ஒரு அமைப்பு அல்லது அறக்கட்டளையாகவே செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில்  பொதுமக்கள் இவற்றை சரியாக புரிந்து கொண்டு செயற்படவேண்டும் அவர்  இதன்போது கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆணைக்குழுசெயற்படும் மனித உரிமைகள் பவுண்டேசன்மனித உரிமைகள்வவுனி
Comments (0)
Add Comment