வவுனியா கனகராஜன்குளம் பகுதியிலிருந்து நேற்று இரவு ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக கனகராஜன்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கனகராஜன்குளம், மன்னகுளம் பகுதியில் வீதி ஓரத்தில் கைக்குண்டு, மகசீன் அதற்குரிய ரவைகள் 30 என்பன இருப்பதாக பொது மக்களினால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் அதனைப் கைபற்றியுள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.