வவுனியாவில் வாள்வெட்டு -ஒருவர் படுகாயம்

வவுனியா நெளுக்குளம் பகுதியில் இன்று (02.04.2019) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வியாபார நடவடிக்கைக்காக தண்டாங்குளம் பகுதியிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நபர் மீது முகத்தினை மறைத்துக்கொண்டு பற்றைக்குள் பதுங்கி நின்ற இருவர் சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் செட்டிக்குளம் தட்டாங்குளம் பகுதியினை சேர்ந்த 27வயதுடைய நவசுதர்சன் என்ற இளைஞனே படுகாயமடைந்துள்ளார்.

குறித்த நபர் சிகிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் இரு கால் மற்றும் வலது கையில் பாரிய வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக வைத்தியாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவாள்வெட்டுவைத்தியசாலை
Comments (0)
Add Comment