வவுனியா, நொச்சிமோட்டைப் பிரதேசத்தில் நான்குபேர் கைது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில்  நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள தங்கத்தை தேடி எடுப்பதற்காக, சென்ற நான்கு பேர் ஸ்கேனர் இயந்திரத்துடன், கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, நொச்சிமோட்டைப் பிரதேசத்தில் வைத்து, இன்று  பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இத்தகவலை  வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின்படி மேற்கொண்ட திடீர் சோதனையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட  ஸ்கேனர் இயந்திரம் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியானது என்றும்  பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா மற்றும் எம்பிலிபிட்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்  கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் இயந்திரமும் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன், வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார்  ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுநான்குபேர்நொச்சிமோட்டைபுதையல்வவுனியா
Comments (0)
Add Comment