வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் தீ …..

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

விபுலானந்த கல்லூரியின் களஞ்சிய அறையில் இன்று  மதியம் 1.30 மணியளவில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.

இதனை அவதானித்த பாடசாலை சமூகத்தினர் பண்டாரிக்குளம் பொலிஸார்  மற்றும் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த தீ விபத்து மின்னொழுக்கினால் நேர்ந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில்  களஞ்சிய அறையில் இருந்த திருத்துவதற்குரிய கணிணிகள், கதிரைகள், சமையலுக்கு உரிய பாத்திரங்கள் என்பன முற்றாக எரிந்துள்ளது.

மேலும்  சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை  பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

செண்பகம்தீ விபத்துபண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரிவவுனியா
Comments (0)
Add Comment