வவுனியா மாவட்டத்தில் எலிக்காச்சலின் நோய் அதிகரிப்பு

வவுனியா மாவட்டத்தில் எலிக்காச்சலினால் இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் 31 நோயாளிகள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இத் தகவலை வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் கனகராஜா நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அண்மைக்காலமாக எலிக்காச்சலின் தாக்கம் வவுனியாவில் அதிகமாக உணரப்பட்டுள்ளதாகவும், அந்தவகையில் 2018ம் ஆண்டு அதிகமான நோயாளர்கள் எமது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடம் மார்ச் மாதம் வரை 23 ஆண்களும் 8 பெண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வயல்களில் உள்ள எலியின் சிறுநீரில் இருந்தே கிருமி மனிதர்களை தாக்குகின்றதாகவும் , எலி எங்கேங்கு கூடுதலாக காணப்படுகின்றதோ அந்த இடங்களிலிருந்து கிருமி மனிதரை தாக்கி எலிக்காச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும்

முக்கியமாக வயல்கள் மற்றும் சதுப்பு நிலங்களில் பணபுரியும் பொதுமக்கள் எலிக்காச்சலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வது மிக மிக அவசியம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். .

அப்படியான இடங்களில் பணிபுரிபவர்கள் கால்கள் , கைகளில் காயங்கள் இருக்குமாகவிருந்தால் அவற்றுக்குரிய பாதுகாப்பு அதாவது நீளமான பாதணி அணிதல் வேண்டும் அல்லது காலுறைகளை அணிந்து பணிபுரிய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கிருமிகள் காயங்களிலுடாக, கண், வாய் போன்ற மெல்லிய தோல்களினுடாக உடலுக்குள் சென்று எலிக்காச்சல் பரவுவதற்கு காரணமாவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் காய்ச்சல் போன்ற எதேனும் அறிகுறிகள் காணப்பட்டால் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று மக்கள் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும்
வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் கனகராஜா நந்தகுமாரன் அறிவுறுத்தியுள்ளார்.

எலிவவுனியா
Comments (0)
Add Comment