மட்டக்களப்பு வாகனேரி பிரதேசத்தில் யானை தாக்கியதால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வாகனேரி சுற்றுலா விடுதி வீதியைச் சேர்ந்த 33 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான சிவலிங்கம் குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வாகனேரி குளம்
குறித்த நபர் வாகனேரி குளத்தில் குளிக்கச் சென்றபோது குளப்பகுதியில் வைத்து யானை அவரை தாக்கியுள்ளது.
யானையின் தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்,
சபவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.