மட்டக்களப்பு வாகரை பிரதான வீதியில் இஸ்லாமியர்களுக்கு பாரிய மசூதி கட்டி பாவனைக்கு வழங்க தந்திரோபாய ஆக்கிரமிப்பு திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகரையில் இஸ்லாமிய மசூதி கட்ட முயற்சிக்கும் இஸ்லாமியர்
இஸ்லாமிய மதம் பரப்ப வந்தவர்களா? மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்களா ? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தமிழர்களின் பூர்வீக நிலங்களில் அன்னிய மதங்கள் ஆக்கிரமிக்க புதிதாக பள்ளி கட்டவோ இஸ்லாமியர்களுக்கு காணி வழங்கவோ அனுமதிக்க முடியாது எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
காத்தாங்குடியில் அரச பாடசாலையில் 70 வீதமான தமிழர்கள் கல்வி கற்பிக்கிறார்கள் என்றும், அதே போல் காத்தாங்குடி வைத்தியசாலையில் 60 வீதமான தமிழர்கள் உத்தியோகஸ்தர்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அப்படி பார்க்க போனால் இஸ்லாமிய பகுதிகளில் 100 மேற்பட்ட இந்து ஆலயங்கள் கட்டி இருக்க வேண்டும் என்றும் , 04 போலிஸ் உத்தியோகஸ்தருக்கு பிரதான வீதியில் பாரிய பள்ளி கட்ட எவ்வாறு அனுமதிக்க முடியும் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்..