வாக்காளருக்கு நன்றி செலுத்தும் ஸ்டாலின்

சென்னை கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொகுதியில் சுற்றுப் பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.  கடந்த 23-ந்தேதி அவர் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார். இன்று 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களை சந்தித்தார்.

அவருக்கு பொது மக்கள் கைகுலுக்கியும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர். சிலஇடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மாணவ- மாணவிகள் மு.க.ஸ்டாலினுடன் ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர்.  நேற்று மாலை 4 மணிக்கு கொளத்தூர் அரிதாஸ் தெருவில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தனது 2-வது நாள் சுற்றுப் பயணத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கினார்.  மேற்கு பகுதிக்கு உட்பட்ட பஜனைகோவில் தெரு, எஸ்.வி.எம். பாடசாலை தெரு, கிழக்கு தெரு, காமராஜ் தெரு, வசந்தம் நகர், பூம்புகார் நகர், செங்குன்றம் சாலை, கிழக்கு மற்றும் மேற்கு மாட வீதி, நேர்மை நகர், பாலாஜிநகர், திருப்பதி நகர், வளர்மதி நகர், ஜவகர் தெரு, தனம்மாள் நகர், யுனைடட் காலனி, பேப்பர் மில் ரோடு ரெட்டேரி சந்திப்பு, எம்.ஜி.ஆர். நகர், நீலமேகம் தெரு, அனுசுயா நகர், சிவசக்தி நகர், காந்தி நகர், 100 அடி சாலை.  

அம்பேத்கார் நகர், ராஜன் நகர், தென் பழனி நகர், மக்காராம் தோட்டம், செல்வி நகர், செந்தில்நகர், சீனிவாசநகர், ரங்கதாஸ் ரெட்டி காலனி, நேதாஜிநகர், ராஜாஜி நகர் பிரிவு, முருகன் நகர், ஜ.கே.எம். ரோடு, அக்பர் சதுக்கம், விவேகானந்த நகர், கிருஷ்ணாநகர், ராஜீவ் காந்தி நகர், வீனஸ் நகர், ஜெயந்தி நகர், துறைமுகம் காலனி, திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 9 மணிவரை திறந்த ஜீப்பில் நின்றபடி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.  இன்று 3-வது நாளாக கொளத்தூர் கிழக்கு, மேற்கு பகுதியில் சுற்றுப் பயணம் செய்கிறார். கோபாலபுரம் சந்திப்பில் இருந்து மாலை 3.30 மணிக்கு தனது சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார்.

ஆண்டாள் அவின்யூ 1-வது தெரு, காந்திமதி தெரு, மணவாளன் தெரு, அய்யாலு தெரு, வரதராஜன் தெரு, குமரன் நகர் சந்திப்பு, சக்திவேல் நகர் 3-வது தெரு, சக்தி விநாயகர் கோவில் தெரு, பேப்பர் மில்ஸ் சாலை, லட்சுமணன் நகர் மெயின் ரோடு, ராம்நகர் 1-வது மெயின் ரோடு, ராம்நகர் 3-வது மெயின் ரோடு, ராமமூர்த்தி காலனி, மெயின் ரோடு, எஸ்.ஆர்.பீ. கோவில் தெரு, கே.சி.கார்டன் 1-வது குறுக்கு தெரு, கே.சி. கார்டன் 4-வது தெரு, கே.சி.கார்டன் 3-வது தெரு, கே.சி.கார்டன் 2வது தெரு, எஸ்.ஆர்.பீ.காலனி மெயின் ரோடு, ஜெகன்நாதன் சாலை, வெங்கட்ராமன் சாலை, கார்த்தி கேயன் சாலை, பெரியார்நகர் ஜவகர் நகர் ஆகிய இடங்களில் வீதிவீதியாக செல்கிறார்.  பின்னர் மேற்கு பகுதியான 67-வது வட்டத்தில் ஜெகநாதன் தெரு, பல்லார்டு தெரு, துலுக்கானத்தம்மன் கோவில் தெரு, மூர்த்தி தெரு, பாவாயல் ரோடு சந்திப்பு, ஐந்து கோவில் லோக்கோ, ஒர்க்ஸ், ஜி.கே.எம் காலனி ஆகிய இடங்களில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்.

கொளத்தூர்சுற்றுப்பயணம்சென்னைதிமுகதொகுதிநன்றிபொருளாளர்முக.ஸ்டாலின்வாக்களர்
Comments (0)
Add Comment