வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்

தமிழகம் முழவதும் 65 ஆயிரத்து 961 வாக்குசாவடிகளில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் இன்று நடைபெறவுள்ளது.  

நாடு முழுவதும் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணிகள் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, 18 வயது பூர்த்தியானவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டும், இறந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்தும் பட்டியல் புதுப்பிக்கப்படும்.   இந்தாண்டுக்கான பணிகள் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கிய நிலையில், தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்களுக்கான சிறப்பு முகாம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள 65 ஆயிரத்து 961 வாக்குசாவடிகளில் நடைபெற உள்ளது.   ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் செப்டம்பர் 18ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாவடிசிறப்புதமிழகம்திருத்தம்பட்டியல்முகாம்வாக்காளர்வாக்கு
Comments (0)
Add Comment