வாக்காளர் பட்டியலில் 6.46 லட்சம் பெயர்கள் நீக்கம் – ராஜேஷ் லக்கானி

வாக்காளர் பட்டியலில் இருந்து 6.46 லட்சம் பெயர்கள் நீக்கப்படுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர்கள், இறந்தவர்கள் பெயர்கள், ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றுள்ளதாக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சுமத்தினார்கள்.   இதைதைத் தொடர்ந்து. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியின்  உத்தரவின்பேரில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணிகள் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் நடத்தப்பட்டன.   இந்த பணி இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து 6.46 லட்சம் பெயர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜேஷ் லக்கானி செய்தியாளரிடம் கூறியதாவது:-   வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணியின் கீழ், இறந்த வாக்காளர்கள், இருமுறை பெயருள்ள வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு வருகின்றன.   இறந்த வாக்காளர்கள் என்ற அடிப்படையில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 483 பேரின் பெயர்கள் நீக்கப்பட்ட உள்ளன.   வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உள்ள பெயர்கள் என்ற அடிப்படையில், 2 லட்சத்து 58 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களும், ஒரே வாக்காளர் எண் கொண்டதாக அறியப்பட்ட 7 ஆயிரத்து 500 பேரின் பெயர்களும், பெயர்களை நீக்குவதற்காக படிவம் 7 ஐ அளித்த 97 ஆயிரம் பேரின் பெயர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளன.

வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணிகளின் அடிப்படையில் மட்டும் இதுவரை 6 லட்சத்து 46 ஆயிரத்து 983 பேரின் பெயர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.   பெயர்களை நீக்குவதற்காக படிவம் 7 ஐ அதிகளவு அளித்தால், இந்த 6 லட்சத்து 46 ஆயிரம் என்ற எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.   தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரிதமிழகம்தலமைதேர்தல்நீக்கம்பட்டியல்பெயர்கள்ராஜேஷ் லக்கானிவாக்காளர்
Comments (0)
Add Comment