அண்ணாதுரை போல் புன்னகை தவழும் முகத்துடன், ஈ.வெ.ராமசாமியை போல, நெஞ்சு நிமிர்த்திய நடையுடன், வயதான இந்தக் காலத்திலும், வாலிப முறுக்கு எனக்கும் வந்தே தீரும் என திடம் கொள்கிறேன்.
திசையெட்டுமிருந்து தீ பரவினாலும், தீயோர் வலை நாள்தோறும் விரிக்கப்பட்டாலும், கணைகள் ஆயிரமாயிரம் கடுகிப் பறந்து வரினும் கவலைப்படாது, கருமமே கண்ணாக, கழகமே பாசறையாக, ஈ.வெ.ராமசாமி துணையாக, அண்ணாதுரையே என் உயிரின் இணையாக இருக்கும்போது, இந்த முப்பெரும் விழாவை சிறப்பிக்க செய்ய உன் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பேன் என்று கூறியுள்ளார்.