விஐயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாக யாழில் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ..

அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த விஐயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாக யாழில் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது

யாழில் கடந்தவாரம் இடம்பெற்ற நிகழ்வொன்றில்  கலந்துகொண்ட விஐயகலா மகேஸ்வரன்   புலிகளை மீள உருவாக்க வேண்டுமென கூறி இருந்தார்.

அவரது இந்த உரைக்கு தெற்கிலிருந்து கடுமையான எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்ட நிலையில். நாடாளுமன்றத்திலும் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன.

இந்த  நிலையில் தமிழ் மக்களுக்காக தன்னுடைய பதவியை தான்  இராஜினாமா செய்வதாக நேற்றையதினம் அவர்  அறிவித்திருந்தார்.

இதனையடுதே அவருக்கு ஆதரவாக குடாநாட்டின் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இதேவேளை தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு அன்று உயிர் துறந்தவர் மகேஸ்வரன் இன்று பதவி துறந்தவர் விஐயகலா என்று குறிப்பிடப்பட்டே இச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆதரவுஇரஜாங்க அமைச்சர்இராஜினாமாசுவரொட்டிகள்விஜயகலா மகேஸ்வரன்
Comments (0)
Add Comment