விசுவமடுவில் வேலைவாய்ப்பு தருவதாக மக்களிடம் விவரம் சேகரிக்கும் படையினர்…

விசுவமடு தொட்டியடி பகுதியில் நிலைகொண்டுள்ள இரானுவத்தினர் அங்குள்ள மக்களிற்கு வேலை பெற்றுதருவதாக கூறி விபரங்களை திரட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில்  மக்களிடம் விபரம் பெறும் படிவங்கள் கையளிக்கப்பட்டு படையினர் படையினர் விபரங்களை திரட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

விசுவமடு தொட்டியடி பகுதியில் நிலைகொண்டுள்ள 57 வது படைப்பிரிவின்  2 வது  படைமுகாமில் குறித்த படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் பல பொதுமக்கள் தங்கள் விபரங்களை படையினரிடம் கையளித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்க்து.

படிவம்படையினர்பொதுமக்க்கள்வாலைவாய்ப்புவிசுவமடு
Comments (0)
Add Comment