விசேட அதிரடிப் படையினரின் சுற்றிவளைப்பின் போது பயங்கரவாதிகள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்பட்டும் 4 வீடுகள் முற்றுகை..

அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பயங்கரவாதிகள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்பட்டும் 4 வீடுகள் முற்றுகையிடப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, சாய்ந்தமருது, நிந்தவூர் மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பகுதிளில் பயங்கரவாதிகள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகள் அங்கு தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில் அங்குள்ள 4 வீடுகள் முற்றுகையிடப்பட்டுள்ளன.

அத்தோடு பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 119 பொருட்களும் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறீப்பிடத்தக்கது.

விசேட அதிரடிப்படைவீடுகள்
Comments (0)
Add Comment