முல்லைத்தீவு மாவட்டத்தின் அபகரிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுப்விப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் வடமாகாண ஆளுநர் ரெஜினோட் கூரே தலைமையில் இன்று காலை பத்து மணிமுதல் இடம்பெற்றுவருகிறது
இதன்போது ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபட அனுமதிக்கப்பட்டு செய்தி சேகரிப்பில் இருந்தனர் கூட்டத்தில் சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு மேல் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இருப்பினும் இராணுவ தரப்பில் காணி விடுவிப்புக்கள் தொடர்பில் சாதகாமான முடிவுகள் வழங்கப்படாது முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படும் வேளையில்,
(குறிப்பாக கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக உள்ள இராணுவ முகாம் உள்ளிட்டவை ) ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு ஆளுநரின் செயலாளர் பிரேமசிறி அவர்கள் தெரிவிக்க ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் தொடர்ந்தும் ஈடுபட்டனர்.
இதன்போது ஊடகவியலாளரது கமராவை அகற்றுமாறும் இல்லை எனில் கமராவை தான் அகற்றுவேன் எனவும் அச்சுறுத்தினார்
தொடர்ந்து ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டபோது குறித்த செயலாளர் ஆளுநரிடம் சென்று கூறியதால் ஊடகவியலாளர்களை ஆளுநர் வெளியில் செல்லுமாறு பணித்தார்
இந்த நடவடிக்கைகளை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர்களான சி சிவமோகன் திருமதி சாந்திசிறிஸ்கந்தராஜா பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ,
மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்டோர் வேடிக்கை பாத்தவர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது