விசைத்தறி தொழிலாளர்கள் செப்டம்பர் 18ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்

கூலி குறைக்கப்பட்டதை கண்டித்து திருப்பூரில் விசைத்தறி தொழிலாளர்கள் செப்டம்பர் 18ம் தேதி  உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.  

திருப்பூர் மாவட்டம் பல்லடம், மங்களம், வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் விசைத்தறி மூலம், கூலிக்கு நெசவு செய்யும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2012ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, ஊழியர்களுக்கு குறைவான கூலி வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒப்பந்தத்தின் படி, கூலி வழங்க கோரி செப்டம்பர் 18ம் தேதி பல்லடத்தில் விசைத்தறி ஊழியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

உண்ணாவிரதம்கூலிசெப்டம்பர்தொழிலாளர்போராட்டம்விசைத்தறி
Comments (0)
Add Comment