விஜயகலா மகேஸ்வரனை இராஜாங்க அமைச்சர் பதவி யிலிருந்து தற்காலிகமாக நீக்கு வதற்குத் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியிடம் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்துத் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை அவரை இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதற்கே பிரதமர் பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்தில் அரசமைப்போ அல்லது தற்போதைய சட்டமோ மீறப்பட்டிருக்குமாயின் அது குறித்து ஆராய்ந்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு சபாநாயகர் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் யாழில் தெரிவித்திருந்தமைக்கு நாடாளுமன்றத்தில் பலர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
இந்தப் பின்னணியிலேயே இராஜாங்க அமைச்சரை தற்காலிகமாக பதவில் இருந்து நீக்க பிரதமர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.