விஜயகலா மகேஸ்வரனிடம் விசாரணை – பொலிஸார் கோரிக்கை..

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனிடம் விசாரணை நடத்துவதற்கு  சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் பொலிஸார்  அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என கூறியிருந்தார்.

அவர் கூறிய  இந்த கருத்துத் தொடர்பாக கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பொலிஸார் இந்தத்  கோரிக்கையினை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில்  விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பாக இதுவரை 40 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. .

எனினும், சபாநாயகரின் அனுமதியுடனேயே விஜயகலா மகேஸ்வரனிடம் விசாரணை நடாத்தப்படவேண்டும் என்பதால் அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்குக் பொலிஸார்  அனுமதி கோரியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

அனுமதிசபாநாயக்கர்நீதிமன்றம்பொலிஸார்விஜயகலா மகேஸ்வரன்
Comments (0)
Add Comment