விஜயகலா மகேஸ்வரன் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துள்ளது – கொழும்பு ஊடகம்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்டு வந்த விசாரணைகள் முடிவடைந்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் எனக் கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திய உரையின் போது விஜயகலா மகேஸ்வரன் கூறியிருந்தார்.

இதனையடுத்து அவரது பதவி நீக்கம் செய்யப்பட்டு பொலிஸ் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

தற்போது குறித்த விசாரணைகள் முடிவுக்கு வந்திருப்பதாகவும், சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக இன்னும் ஓரிரு நாட்களில் அந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும்  பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, விஜயகலா மகேஸ்வரன் உரை  தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் சிறப்புக் குழுவொன்று யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் பலரிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையும்   குறிப்பிடத்தக்கது.

ஊடகம்கொழும்புவிசாரணைகள்விஜயகலா மகேஸ்வரன்
Comments (0)
Add Comment