விஜயகாந்திற்கு தமிழில் பிடிக்காத வார்த்தை நன்றி

விஜயகாந்திற்கு தமிழில் பிடிக்காத வார்த்தை நன்றி என்று அதிமுக ஆதரவு எம்எல்ஏ சுந்தர்ராஜன் கூறியுள்ளார். மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பழங்காநத்தத்தில் அ.தி.மு.க. அரசின் 3 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

அதில் அமைச்சர் பா. வளர்மதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் சுந்தரராஜனும் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், விஜயகாந்த்துக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை நன்றி. எனவே தான் புரட்சித் தலைவி அம்மாவால் பெற்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகாமல் ஒட்டி கொண்டு இருக்கிறார்.

நானும் பல முறை சொல்லி பார்த்துவிட்டேன். நீயும் பதவியில் இருந்து விலகு, எங்களையும் கட்சியில் இருந்து நீக்கு என்றேன். ஆனால் எதையும் விஜயகாந்த் செய்யவில்லை. மின் கட்டண உயர்வு குறித்து சட்டசபையில் பேச துணிவு இல்லாதவர் என்று கூறியுள்ளார்.

அதிமுகஅம்மாசாதனைசுந்தர்ராஜன்தமிழ்பொதுக்கூட்டம்வளர்மதிவிஜயகாந்த்
Comments (0)
Add Comment