சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த வைகோ, செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் நல கூட்டணிக்கு வருமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தோம்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணி இயக்கத்தின் கொள்கைக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறினார்.
இந்த கருத்துக்கு மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் , விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, விஜயகாந்த்தை நேரில் சந்தித்து சுமார் 70 நிமிடங்கள் உரையாடினோம். விரிவாக அரசியல் கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். மக்கள் நலக் கூட்டணியில் அவர்கள் கரம் கோர்ப்பது குறித்தும் தமிழக அரசியலில் மகத்தான மாறுதல் குறித்தும் ஆழமாக பல்வேறு கோணங்களில் விவாதித்தோம். எங்கள் வேண்டுகோளை ஏற்று சாதகமான முடிவெடுப்பார் என்ற நம்பிக்கையோடு நாங்கள் இருக்கிறோம் என்று தெரிவித்தார் வைகோ.