அப்போது நிழற்குடையில் இருந்த ஜெயலலிதா படம் கீழே விழுந்தது. இதையடுத்து அதிமுகவினர் அங்கிருந்த தேமுதிக பேனர்களை கிழித்தனர். அதிமுக எம்எல்ஏ ரங்கசாமி தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் விஜயகாந்த் உள்பட தேமுதிகவினர் மீது புகார் கொடுத்தார்.
இந்த நிலையில் விஜயகாந்த் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேமுதிக வழக்கறிஞர் ஜெயகுமார் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.