விடுதலைப்புலிகள் ஜனநாயக தன்மையை எப்பொழுதும் கைகொண்டவர்கள் -சி.வி.கே. சிவஞானம்

விடுதலைப்புலிகள்  ஜனநாயகத் தன்மையை எப்பொழுதும் கைகொண்டவர்கள் என்றும் அவர்கள்  . ஜனநாயகத்திற்கு விரோதமாக எப்போதும்  இருக்கவில்லை  எனவும்   வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அதோடு  விடுதலைப்புலிகள் பற்றி தப்பாக கதைப்பவர்கள் புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

சமகால அரசியல் நிலை தொடர்பாக அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊட சந்திப்பின்போது கூட்டமைப்பின் பேச்சாளர்  சுமந்திரன்,

விடுதலைப்பலிகள் ஜனநாயகத்தை விரும்பவில்லை எனவும் கட்சித் தலைவர்களை  கொலை செய்துள்ளார்கள்  என  கூறியது தொடர்பில் வினவியபோதே   அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும்  விடுதலைப்புலிகளின் தலைவர் என்னுடன் பேசியதை மட்டும் நான் கூற விரும்புகிறேன் என்றும்,

பிரபாகரன் 1991 ஆம் ஆண்டு ஜனாதிபதி பிரேமதாசாவை சந்திப்பதற்கு என்னை தெரிவு செய்த அனுப்பினார்.

அப்போது ஈரோஸ்  பட்டியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக பிரேரித்து வர்த்தகமாணி பிரசுரம்  வெளியிடப்பட்டு அதற்குப் பின்னர் அதன் அடிப்படையில் தான் அனுப்பினார்கள்.

இதில் இரண்டு விடையங்களை கூறினார்கள். நாங்கள் எல்லா நேரமும் சண்டை பிடித்துக் கொண்டு இருக்க முடியாது. பாராளுமன்ற அரசியலிலும் நாங்கள் ஈடுபடவேண்டிய தேவை இருக்கின்றது. ஆகவே அந்த வகையில் இந்தப் பாராளுமன்றப் பொறுப்பை நீங்கள்  எடுத்து ஜனநாயக ரீதியாகவும் அந்த வழி முறைகளிலும் நாங்கள் முன்னேடுக்கவேண்டும்  என்று 1991 ஆம் அண்டு  பிரபாகரன் தனக்குக் கூறியதாகவும்,

இந்த விடையங்கள் நீண்ட காலத்தின் பின்னர் பேசப்படுகின்றபோது சில விடையங்கள் மறைக்கப்படுகின்றனவா மறக்கப்படுகிறதா என  தெரியாமலும் இருக்கும்.  ஆனால்  விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில் ஜனநாயகத் தன்மையை எப்பொழுதும் கைகொண்டவர்கள் அதனாலே தான் ஒவ்வொரு கிராம அமைப்புக்கள்  , பொது அமைப்புக்கள்  உருவாக்கப்பட்டது. ஜனநாயகத்திற்கு விரோதமாக எப்போதும் புலிகள் இருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

சி.வி.கே.சிவஞானம்ஜனநாயகத் தன்மைவடமாகாண சபையின் அவைத்தலைவர்விடுதலைப்புலிகளைப்
Comments (0)
Add Comment